யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது தமிழீழ விடுத லைப் புலிகள் அமைப்பின் பாடல் கள் பகிரங்கமாக ஒலிக்கவிடப்பட் டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கட்சி ஒன்றின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளி யீட்டு நிகழ்விலேயே புலிகளின் கீதங்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத் தளங்களில் பல கருத்துக்கள் பரவி வருகி ன்றன.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர னின் புகைப்படத்தை கைத்தொலைபேசியில் வைத்திருந்தமைக்காகவும், புலிகளின் இல ட்சினையை பயன்படுத்தி வாழ்த்து தெரிவித் தமைக்கும் இளைஞர்கள் கைது செய்யப் படுகின்றார்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் கட்சிக் கூட் டம் ஒன்று நடைபெறும் போது புலிகளின் கீதங்கள் பகிரங்கமாக ஒலிக்கவிடப்பட்டுள் ளன. இங்கு என்ன நடக்கின்றது? என ஒரு சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இதேவேளை, உள்@ராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கட்சி ஒன்றின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறும் போது புலிகளின் கீதங்கள் ஒலி பரப்பப்பட்டுள்ளன என ஒரு சாரார் அதை சாதாரணமாகவும் பதிவிட்டுள்ளனர்.
எனினும், தேர்தல் பரப்புரை கூட்டங்க ளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பின் பாடல்களை ஒலிக்க விடுவது தேர்தல் விதிமுறை மீறல் மாத்திரமல்ல, சட்டவிரோத மும் கூட என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித் தார்.
யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடிகள், சின்னங்கள் போன்றவற்றை உப யோகப்படுத்துவது சட்டவிரோதமானதே. அது தேர்தல் விதிமுறை மீறல் என்பவற் றுக்கு அப்பால் அது சட்டவிரோதமானது என வும் குறிப்பிட்டுள்ளார்.