ஆளுங்கட்சிக்கு உள் ளேயே எதிர்கட்சி உரு வாகி யுள்ளதால் எதிர்கட்சிக்கு வேலை இல்லை என தெரிவித்து வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தார்கள்.
வடக்கு மாகாணசபை யின் 129 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. அதில் அமைச்சரவை தொடர்பான விவாதம் ஆர ம்பித்தது. அப்போது ஆளும் கட்சி உறுப்பின ர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
குறித்த விடயத்தை நிறுத்துமாறு கோரி னார்கள். ஆனால் தொடர்ந்து வாக்குவாதம் இடம்பெற்றபோது, இந்த அவையில் ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சி உருவாகியு ள்ளது. எனவே எதிர்க்கட்சியாகிய எமக்கு இங்கு வேலை இல்லை. அதனால் வெளி நட ப்பு செய்கிறோம் என தெரிவித்து வெளியே சென்றார்கள்.