குழந்தை வளர்ப்பின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை நோக்கி நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்பாக்கள் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல், குழந்தை வளர்ப்பில் பங்கு பெறுபவர்களாகவும் இருந்தால் அம்மாக்களின் பளுகுறையும்\"குட்டீஸ்களுடன் இருக்கும் போது அம்மாக்களைவிட அப்பாக்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள்.
கலிபோர்னியா பல்க லைக்கழத்தின் அண்மைய ஆராய்ச்சி இதைச் சொல்லியி ருக்கிறது. அப்பா என்றாலே கண்டிப்பு, தண்டிப்பு என்றிருந்த காலம் தற்போது இல்லைத்தான். பெருவாரியான வீடுகளில் ஒரு குழந்தைதான் என்பதால், அப்பாக்களின் ரோலே இன்றைக்கு கண்டிப்பில் இருந்து பிரெண்ட்லிக்கு மாறி விட்டது. சரி, அந்த ஆராய்ச்சியின் முழு விபரம் என்ன, அம்மாக்களைவிட அப்பாக்கள் அதிகம் ஆனந்தப்படுவதன் பின்னணி என்ன என்று ஆய்வாளர்; ஒருவருரிடம் கேட்கப்பட்டது.
“அந்த ஆராய்ச்சியை மூன்று கட்ட மாகப் பிரித்துச்செய்திருக்கிறார்கள். முதல் பிரிவில் குழந்தை இருக்கிற அப்பாக்கள், குழந்தையில்லாத அப்பாக்கள் என்று இரு பிரிவினரிடம் ஆராய்ச்சி செய்ததில், குழந்தை இருக்கிற அப்பாக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். இரண்டாம் பிரிவில் ஸ்ட்ரெஸ் அதிகமான, படபடப்பான, பிரச்சினைகள் அதிகம் கொண்ட அப்பாக்கள் குழந்தைகளுடன் இருக்கும்போது, அவற்றையெல்லாம் மறந்து ஆனந்தமாக இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மூன்றாவதில், குழந்தைகளுடனான தங்கள் பொறுப்பு அதிகமாக அதிகமாக, அப்பாக்களின் சந்தோசமும் அதிகமா கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி” என்றவர், நம் ஊரைப் பொறுத்தவரை பணம் செலவழித்து ஆராய்ச்சி செய்தெல்லாம், அம்மாக்களைவிட அப்பாக்கள் குழந்தை வளர்ப்பில் ஆனந்தமாக இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவேண்டிய அவசியமே இல்லை என்கிறார். அதற்கான காரணத்தையும் அவரே விளக்கினார்.
\'நம் நாட்டைப் பொறுத்தவரை, அந்தக் காலத்து அம்மாக்கள் வீட்டைப் பார்த்துக் கொள்வதையும் குழந்தை வளர்ப்பையுமே முக்கியமான பணியாகச் செய்துவந்தார்கள். அப்பாக்கள் வேலைக்குப் போய் வந்து பொருளாதாரத் தேவைகளைப் பார்த்துக்கொண்டார்கள். இந்தக் கால அம்மாக்கள், வீட்டு வேலை, அலுவலக வேலை என இரட்டைப் பளுவை சுமந்துகொண்டிருக்கிறார்கள். வேலைக்குப்போகிற காரணத்தால், வீட்டு வேலைகளை ஆண்கள் செய்ய வேண்டாம் என்ற நியாயம், ஏனோ பெண்களுக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், குழந்தைகளுடன் அம்மாக்கள் இணைந்து செய்கிற வேலைகளைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். காலையில் அவர்களை எழுப்புவது, குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்கு தயார்படுத்துவது, சாப்பாடு ஊட்டுவது, பிள்ளைகளின் வீட்டுவேலை சொல்லித்தருவது போன்ற பணிகளை எல்லாம் அம்மாக்கள்தான் செய்கிறார்கள்.
குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது, கேட்கின்ற விளையாட்டுச் சாமான்களை வாங்கித் தருவது, விதவிதமாக சாப்பிட வாங்கித் தருவது, உடன் விளையாடுவது என்று குழந்தைகளின் பண் ஏரியாக்கள் எல்லாம் அப்பாக்களின் கைவசம் இருக்கின்றன.
விதிவிலக்குகளும் இருக்கலாம். இப்படியிருக்கும்போது, அந்த ஆராய்ச்சியை நம் நாட்டில் செய்தாலும் தற்சமயம் அம்மாக்களைவிட அப் பாக்கள்தான் குழந்தை வளர்ப்பில் சந்தோசமாக இருப்பார்கள் என்பதுதான் தனிப்பட்டக் கருத்து. ஏனென்றால், நம் ஊரில் பெண்களுக்குத் தான் குழந்தை வளர்ப்பில் அதிக கஷ்டம் இருக்கிறது என்பது கண் கூடான ஒன்று.
ஆனாலும், சிலரைத் தவிர பெரும்பான்மையான ஆண்கள் இதைக் கண்டு கொள்வதுமில்லை, உதவி செய்வதுமில்லை. குழந்தை வளர்ப்பின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை நோக்கி நாம் பய ணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
அப்பாக்கள் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல், குழந்தை வளர்ப்பில் பங்கு பெறுபவர்களாகவும் இருந்தால், அம்மாக்களின் பளுகுறையும். அப்போது, அப்பாக்களைப் போலவே அம்மாக்களும் குழந்தை வளர்ப்பில் ஆனந்தமாகவே இருப்பார்கள்.