நீங்கள் என்னதான் முயன்றாலும் தோனியாகிவிட முடியாது என்று தினேஷ் கார்த்திக்கை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ரி20 இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு தினேஷ் கார்த்திக் காரணம் என்ற ரீதியில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஹமில்டனில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரின் இறுதி போட்டி நடந்தது. இதில் கடைசி ஓவ ரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டன.இலங்கையில் நடந்த நிடாஹஸ் கிண்ண ரி20 தொடரில் ஏற்பட்டதுபோன்ற சூழல் ஹமில்டன் போட்டியில் இருந்தது. ஆனால், முடிவு மட்டும் மாறிவிட்டது. பங்களாதேசுக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் காட் டடி அடித்து கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான இந்த இறுதிஆட்டம் தலைகீழாக மாறிவிட்டது. கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இரு ஓட்டங்கள் எடுத்த நிலையில், 4 பந்துகளில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டன. கார்த்திக், குர்னல் பாண்டியா களத்தில் இருந்தனர். ஆனால், பந்தை அடித்த கார்த்திக் ஒரு ஓட்டம் எடுத்து, ஸ்டிரைக்கை குர்னல் பாண்டியாவிடம் வழங்கி இருக்கலாம்.
ஆனால், ஸ்டிரைக்கை குர்னல் பாண்டியாவிடம் வழங்காமல் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பின்பே பின்பே ஒரு ஓட்டம் எடுத்தார். அதன்பின் கடைசிப் பந்தில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு சிக்ஸர் அடித்தார் தினேஷ் கார்த்திக்.
ஒருவேளை ஸ்ட்ரைக்கை குர்னல் பாண்டியாவிடம் கொடுத்திருந்தால், அவர் சிக்ஸரோ அல்லது பவுண்டரியோ அடித் திருந்தால், ஆட்டத்தின் முடிவு மாறியிருக் கும். ஆனால், தினேஷ் கார்த்திக் ஓட்., எடுக்கா மலும், குர்னல் பாண்டியாவுக்கு துடுப்பாட்டம் செய்ய வாய்ப்பளிக்காதது விமர்சனத்துக்குள்ளா னது.
இந்த சம்பவத்தைப் பார்த்த வர்ணனையாளராக இருந்த கௌதம் கம்பீரும் கடுமையாக ஆட்சேபம் தெரி வித்தார். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் பொறுப்பை பகிர வேண் டும், ஒருவனே பொறுப்பை சுமக்க நினைக்கக் கூடாது, தினேஷ் கார்த்திக் ஒரு ஓட்டம் எடுத்து, குர்னல் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என்றார்.
தினேஷ் கார்த்திக்கின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும், விமர் சனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.